எகிப்து நாட்டில் நடைபெறும் பன்னாட்டுக் கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத்தினர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
எகிப்து நாட்டின் முகமது நாகூப் ராணுவத் தளத்தில் இம்மாதம் 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை பன்னாட்டு முப்படையினர் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது. பிரைட் ஸ்டார் என்னும் பெயரில் இதில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத்தின் அதிகாரிகள், படைவீரர்கள் 137 பேர் கொண்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 34 நாடுகளின் படைகள் பங்கேற்க உள்ளதாகவும், இது நடுகிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க மண்டலத்தின் மிகப்பெரிய கூட்டுராணுவப் பயிற்சி என்றும் தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சியில் முதன்முறையாக இந்திய முப்படை அணிகள் பங்கேற்கின்றன. ராணுவத்தின் ஜாட் படையினர் உட்பட மொத்தம் 549 பேர் இந்தப் பயிற்சிக்காக எகிப்து செல்வதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours