இந்தியா – நேபாளம் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு ….

Spread the love

ஆசியக்கோப்பை தொடரில் இன்று இந்தியா – நேபாளம் அணிகள் மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கிடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அதே போல், இந்திய அணி பேட்டிங் முடித்ததும் விடாமல் மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்தியா – நேபாளம் அணிகள் மோதும் போட்டியின் போதும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியும் பல்லகேலே மைதானத்தில்தான் நடைபெற உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆனால் இன்று மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால், இந்தியா 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா வெற்றி பெற்றாலும் சூப்பர் 4 சுற்றுக்கு செல்லும்.

ஆனால் நேபாளம் வெற்றி பெற்றால் இந்தியா வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அதனால் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours