மத்திய அரசின் 9 ஆண்டுகால பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், நிலையான வளர்ச்சிப்பாதையில் இந்தியா பீடுநடைபோடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பி-20 உச்சிமாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்ததாகக் கூறினார்.
இந்த நடவடிக்கைகளின் பலனாக, இந்திய நிலையான வளர்ச்சிக்கான பாதையில் பீடு நடைபோடுவதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2018ம் ஆண்டு12 புள்ளி 3 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மூலதன செலவீனங்களின் பங்கு, நடப்பு நிதியாண்டில் 22 புள்ளி 4 சதவீதமாக இருப்பதாகக் கூறினார். மாநில அரசுகளின் மூலதன செலவீனம் 74 புள்ளி 3 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொளாதார வளர்ச்சியை நிர்வகிக்க, சுகாதாரம் மற்றும் கல்விக்கான முதலீடு மிகவும் முக்கியம் என்று
நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
நீடித்த மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய ஏதுவாக, அவ்வப்போது பணவீக்கத்தை பரிசோதிக்க மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours