இன்று ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்றது. இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடியது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்துவிட்ட நிலையில் தான் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இன்று தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.
கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்கள், சுப்மன் கில் 19 ரன்கள், விராட் கோலி 3 ரன்கள், கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
+ There are no comments
Add yours