ஜி20 மாநாட்டு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது மத்திய பாஜக அரசு. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிர காட்டி வரும் நிலையில் கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றி குடியரசு தலைவரின் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதை மெய்ப்பிக்கும் வகையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், பாரத் குடியரசு என குறிப்பிட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நமது நாகரிகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதில் மகிழ்ச்சி பெருமிதம் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், பாரத் குடியரசு என அழைப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அரசியல் சாசனத்தின் 1வது பிரிவில் இடம்பெற்றுள்ள மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும், மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்படும். ஜி20 மாநாட்டில் பங்கேற்க விருந்தினர்களுக்கு பாரத் குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
+ There are no comments
Add yours