காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் தேசியச் செயற்குழுவை மாற்றியமைத்துள்ளார்.
அதில் கார்கே, சோனியாகாந்தி, மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, மீராகுமார், சசிதரூர் உட்பட 39 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர 18 பேர் நிலையான அழைப்பாளர்கள், மாநிலங்களுக்கான 14 பொறுப்பாளர்கள், 13 சிறப்பு அழைப்பாளர்கள் கொண்ட பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதில் கட்சியின் இளைஞரணி, மாணவர் அணி, மகளிரணியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். நிலையான அழைப்பாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனாட்சி நடராஜனும், மாநிலங்களுக்கான பொறுப்பாளர்களில் செல்லக்குமார், மாணிக்கம் தாக்கூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
+ There are no comments
Add yours