தமிழ்நாட்டை காப்பியடிக்கிறாரா அரவிந்த் கெஜ்ரிவால் !

Spread the love

தமிழ்நாட்டைபோல் சத்தீஸ்கரில் மகளிருக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறார்.

சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சி நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் இப்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. குறிப்பாக ஆளும் காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஆம் ஆத்மியும் தனித்து களம் காண்கிறது.

இதற்காக கடந்த 5 மாதங்களில் 3 வது முறையாக ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சத்தீஸ்கர் சென்று உள்ளார். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கிறார். வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.

வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும், வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை அளிக்கப்படும், வேலையில்லாத 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும், பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்து உள்ளார். அதேபோல், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை போன்றே மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், கிராமங்கள், நகரங்களுக்கு தடையின்றி 24 மணி நேரம் மின்சாரம், கடன் தள்ளுபடி அளிக்கப்படும், 18 வயதுக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஸ்ரீ சம்மன் ராஷி என்ற பெயரில் ரூ.1000 வழங்கப்படும் என அவர் அறிவித்து இருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours