இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னை, ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றியவர் வளர்மதி. இஸ்ரோ விஞ்ஞானிகள் பலராலும் பாராட்டுபெற்ற ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதியின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். சந்திரயான் 3, கடந்த ஜூலை 30-ல் சிங்கப்பூர் செயற்கைகோள்களை ஏந்தி சென்ற பி.எஸ்.எல்.வி சி56 ராக்கெட் நிகழ்வை கடைசியாக வர்ணனை செய்தார் வளர்மதி.
+ There are no comments
Add yours