தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது ரூ.848.86 கோடி கடனாக பெற்றுள்ளது. அதில் ரூ. 538.62 கோடி கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளதாக கனரா வங்கி புகார் அளித்து இருந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது, கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தங்கள் வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தியது. மேலும், அதன் நிறுவனர் நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகைவிட்டார்.
இந்நிலையில் இந்த கடன் வழக்கை பதிவு செய்துகொண்ட அமலாக்கத்துறையினர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி , ஜெட் ஏர்வேஸ் நிறுவன முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் நேற்று நரேஷ் கோயல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
இதனை அடுத்து நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீண்ட நேர விசாரணைக்கு நரேஷ் கோயல் உட்படுத்தபட்டு இருந்தார். இந்த விசாரணை முடிவில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நரேஷ் கோயலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
+ There are no comments
Add yours