18 மாத குழந்தைக்கு 10 கோடி ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை.! டெல்லி முதல்வர் உடனடி நடவடிக்கை.!

Spread the love

டெல்லி, நஜாப்கரில் உள்ள கனவ் சிறுவன் அரியவகை மரபணு நோயால் பாதிப்படைந்துள்ளான். ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (SMA) எனும் மரபணு நோயினால் பாதிக்கப்பட்டால், உடலில் உள்ள நியூரான்கள் பாதிப்படையும். அது முதுகெலும்பில் அமைந்துள்ள நரம்பு செல்கள்களை பாதித்து, தசை இயக்கத்தை பாதிப்படைய செய்துவிடும்.

பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு பிறகு, அமெரிக்காவில் இருந்து 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மூலம் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது. சிறுவன் கனவின் பெற்றோர் ஆம் ஆத்மி எம்பி சஞ்சீவ் அரோராவை தொடர்பு கொண்டனர். அவர் மூலம் மக்களிடம் பணம் சேகரிக்கும் க்ரவுட் ஃபண்டிங் முறை தொடங்கபட்டது.

இதில் பொதுமக்கள், எம்பிக்கள், பிரபலங்கள் என பலர் பணம் கொடுத்தனர். இதன் மூலம் 10.5 கோடி ரூபாய் பணம் வசூலாகி உள்ளது. இதனை தொடர்ந்து மருந்தை கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்திடம் டெல்லி அரசு தொடர்பு கொண்டு மருந்தை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளனர்.

இந்த மருந்து கிடைத்து அதனை சிறுவன் கனவிற்கு செலுத்தியதுடன் தற்போது சிறுவன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், பணம் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 10.5 கோடி ரூபாய்க்கு மருந்தை விற்க ஒப்புக்கொண்டதற்கா அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours