தொழில்நுட்பங்களை கேட்டறிந்த இணையமைச்சர் எல். முருகன் !

Spread the love

நார்வே சென்றுள்ள மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடல் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தை பார்வையிட்டு தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்.

அக்வா_நோர்_2023 என்ற உலகின் மிகப்பெரிய மீன்வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கண்காட்சிக்கு நார்வேயின் KLOSTERGATA நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழாவில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்களுடன் இந்தியாவில் இருந்து சென்ற ‍அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இ‍தை தொடர்ந்து நார்வேயில் உள்ள மிகப்பெரிய கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அதன் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்.

அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆய்வக வசதிகள் குறித்து அமைச்சர்களுக்கு எடுத்துரைத்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours