இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் மோடி அரசு !

Spread the love

வளர்ச்சி மிக்க இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிகத்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்திலும் ரோஜ்கார் மேளா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரோஜ்கார் மேளாக்கள் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நாடு முழுவதும் இன்று 45 இடங்களில் வேலை வாய்ப்பு மேளாக்கள் நடைபெற்றன. சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பிஎப் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிகத்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 341 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, அனைத்து துறைகளிலும் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

முன்னதாக காணொளி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோதி, வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வரும் பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பணி ஆணைகளை பெற்ற இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours