முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
கடந்த 1984 முதல் 1989-ம் ஆண்டு வரை நாட்டின் 6-வது பிரதமராக பதவி வகித்த ராஜீவ் காந்தியின் 79 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு தமது மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொது செயலாளர் கே சி வேணுகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தில்லி வீர்பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திலும் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
+ There are no comments
Add yours