மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழு !

Spread the love

8 துறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவை மாற்றியமைத்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில், உள்துறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் பட்டாச்சார்யாவின் ஓய்வினையடுத்து ப. சிதம்பரம் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி, இந்த உள்துறை விவகாரங்கள் தொடர்பான குழுவில் இடம்பெற்றுள்ளார்.

அந்த குழுவின் தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் லால் உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்திய தண்டனை சட்டம் 1860, இந்திய தடையவியல் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் போன்ற சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 3 மசோதாக்கள் குறித்து இந்த நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்கவுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours