தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று ப.சிதம்பரம் தெரிவிந்துள்ளார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யாவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் சந்திப்பில், மத்திய அரசு சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றுகிறார்கள். ஹிந்தியில் பெயர் வைக்கலாம். பெயர்களை ஹிந்தியில் மொழி பெயர்க்கலாம். தவறென்று சொல்லவில்லை. ஆனால், ஆங்கிலத்திலுள்ள சட்டத்துக்கு ஹிந்தியில் ஏன் பெயர் வைக்க வேண்டும்.
நீதிமன்றங்களில் ஏதாவது ஹிந்தியில் வழக்குரைஞர்கள் குறிப்பிடும்போது, அந்தச் சட்டப் பிரிவின் ஆங்கிலப் பெயரை நீதிபதிகள் கேட்கிறார்கள். நீதித்துறை மிகமிகப் பெரும்பகுதி ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. ஆங்கில சட்டம் வழக்கத்தில் இருக்கும்போது, பெயரை மட்டும் ஹிந்தியில் ஏன் மாற்ற வேண்டும்.
நீட் விலக்குக்கான போராட்டம் நியாயமானது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை. இதனைப் பல முறை நான் தெரிவித்திருக்கிறேன்.
ஒவ்வோர் ஆண்டும் மனிதர்களுக்கு வயது கூடுவதைப் போல, நாட்டின் பொருளாதாரமும், வருமானமும் கூடிக் கொண்டேதான் இருக்கும். சில ஆண்டுகள் குறைந்த அளவில் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம் என்று சிதம்பரம் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours