ஈரான் அதிபர் செயத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின் போது, இந்தியா-ஈரான் இடையேயான இருதரப்பு நல்லுறவு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசித்தனர்.
மேலும், இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். இந்த உரையாடலின் போது, ஈரானின் சபஹர் துறைமுகத்தை இரு நாட்டு உறவுக்கான இணைப்பு மையமாக பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours