பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு புறப்பட்டுள்ளார் .
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது . இந்த கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது தென்னாப்பிரிக்கா வகித்து வருவதால் , அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 15வது பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது .
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார் . பல அப்பாவி உயிர்களை பலிகொண்ட உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளதால் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த மாநாட்டை முடித்த கையோடு சிறப்பு அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக வரும் 25ம் தேதி கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை. இத்தனை வருடம் இந்திய பிரதமராக இருந்தவர்கள் அந்நாட்டிற்கு செல்லாததற்கு காரணம் தற்போது வரை தெரியவில்லை.
+ There are no comments
Add yours