மன் கி பாத் 104-வது அத்தியாயம் !

Spread the love

பிரதமர் நரேந்திர மோதியின் மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் 104-வது அத்தியாயம் அகில இந்திய வானொலியில் நாளை ஒலிபரப்பாகிறது.
பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகி வருகிறது.


இதன்படி இந்நிகழ்ச்சியின் 104-வது அத்தியாயம் நாளை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. பிரதமர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகிறது.
அகில இந்திய வானொலியின் இணையதளம் news on air செயலியிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பாகிறது.


இது தவிர அகில இந்திய வானொலி தூர்தர்ஷன் செய்திகள், பிரதமர் அலுவலகம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் யூ ட்யூப் சேனல்களிலும் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியின் ஹிந்தி ஒலிபரப்பை தொடர்ந்து மாநில மொழிகளிலும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோதி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours