பிரக்யான் ரோவர் பணிகள் முடிந்தது.. செயலற்று கூட போகலாம்….!

Spread the love

இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளை சுற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி, இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்தது.

விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட்பகுதியில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவின் ஒரு நாள் ( பூமியின் 14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

பிரக்யான் ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆய்வு தகவல், புகைப்படம், அதன் நிலைப்பாடு என இஸ்ரோ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்தது. அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, நிலவின் தென் துருவப் பகுதியில் பிளாஸ்மா இருப்பதை முதன்முதலில் அளவீடு செய்திருந்தது பிரக்யான் ரோவர்.

நிலவின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ள தகவல் உட்பட, பல்வேறு தகவல்களை வெளியிட்ட ரோவரின் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலில், பிரக்யான் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து மீண்டும் சூரிய உதயத்தில் ரோவர் தனது பணியை துவங்கும் நம்பிக்கை இருக்கிறது .

வரும் செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்று கூட போகலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours