இந்திய ஜனாதிபதி To ‘பாரத்’ ஜனாதிபதி.! காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்.!

Spread the love

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா போன்ற 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி20 கூட்டமைப்பானது இந்த வருடம் இந்தியா தலைமையின் கீழ் ஆலோசனை கூட்டங்களை மேற்கொள்கிறது.

இதன் உச்சி மாநாடு அடுத்த வாரம் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது இதில் பிரதமர் மோடி உட்பட, ஜி20 உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இதற்கான அழைப்பிதழ் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இதில், குடியரசு தலைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில், பாரத் குடியரசு தலைவர் என பதிவிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X சமூக வலைத்தளத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அதில், குடியரசு தலைவருக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள G20 விருந்துக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்பதற்கு பதிலாக ‘பாரதத்தின் ஜனாதிபதி’ என்று அச்சிட்டு அனுப்பியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1ன் படி “இந்தியாவானது மாநிலங்களின் ஒன்றியமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது இந்த “ஒன்றிணைந்த மாநிலங்கள்” என்பதில் கூட ஆளும் கட்சி திருத்தம் செய்துள்ளது என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours