உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
பிரக்ஞானந்தாவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி தனது X பக்கத்தில் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஓர் உதாரணம் பிரக்ஞானந்தா. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours