கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாடு
கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாடு
மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நவ.21,22 ஆகிய தேதிகளில் தொழில் முனைவோர் மாநாடு பெற உள்ளது. இதையொட்டி மாநிலத்திற்காக முதலீடுகளை ஈரப்பதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானார்ஜி, 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயினுக்குச் சென்றுள்ளார். துபாய் விமான நிலையத்தில் இன்று அவர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
விமான நிலைய ஓய்வறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்கத்தில் நவம்பரில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்குமாறு ரணிலை மம்தா அழைத்தார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் மம்தா பானர்ஜி, “இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் துபாய் சர்வதேச விமான நிலைய ஓய்வறையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அவரை கொல்கொத்தாவில் நடைபெற உள்ள மாநில வணிக உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன்.
அவரும் தன்னை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அன்பான அழைப்பை விடுத்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours