மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..!!

Spread the love

சென்னை அமைந்தகரை செனாய் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (27). வேலை தேடி வந்த இவருக்கு தனது நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (37) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் சீனிவாசன் தனக்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்கள் மூலம் மெட்ரோ ரயில் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக சந்தோஷிடம் கூறியுள்ளார். இதை நம்பிய சந்தோஷ், சீனிவாசனிடம் ரூ.8 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

பணத்தை வாங்கி கொண்ட சீனிவாசன் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி சந்தோஷ் கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்ததுடன், சந்தோசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அமைந்தக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சீனிவாசனை தேடி வந்தனர். இதையடுத்து நேற்று திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours