மும்பையில் ஆகஸ்ட் 31-ல் துவங்க உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில், மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, காங்., – தி.மு.க., – திரிணமுல் காங்., உள்ளிட்ட கூட்டணி வைத்துள்ளன.
இந்த கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம், பீஹாரின் பாட்னாவில், ஜூன் 23ல் நடந்தது. இதில், 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தை பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள நிறுவனருமான நிதீஷ் குமார் ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, இரண்டாவது கூட்டம், கர்நாடகாவின் பெங்களூரில் நடந்தது. இதில், 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற நிலையில், கூட்டணிக்கு, ‘இந்தியா’ எனப்படும், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என, பெயரிடப்பட்டது.
இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், எதிர்க்கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், ஆக., 31 – செப்., 1 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இதில் காங்., கட்சி சார்பில் சோனியா செப்.01-ம் தேதி நடக்க உள்ள இரண்டாவது நாள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக மஹாராஷ்டிரா மாநில காங்., தலைவர், நானா படோல் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours