செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடருக்குப் பின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். ஆனால், அதற்கு முன்பாக செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. ஐந்து அமர்வுகள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் சட்டங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கபடுகிறது.
+ There are no comments
Add yours