ஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி) உள்ளது. இதில் அணில் குமார் (வயது 21) என்ற மாணவர் பி.டெக் கணிதம் மற்றும் கம்பியூட்டிங் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, அணில் குமார் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். சில பாடங்களை படித்து முடிக்காததால் கடந்த 6 மாதங்களாக ஐஐடி விடுதியில் தங்கி அணில் குமார் படித்து வந்தார்.
இந்நிலையில், அணில் குமார் நேற்று மாலை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையின் கதவு வெகுநேரமாக திறக்காததை கண்டு சந்தேகமடைந்த சக மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அணில் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours