18 வருட சினிமா பயணம் குறித்து தமன்னா!

Spread the love

தனது 18 வருட பயணம் குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

திரையுலகில் 18 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார் நடிகை தமன்னா. ‘கேடி’ பட அறிமுகம் முதல் ‘அயன்’, ‘தோழா’, ‘பாகுபலி’ இப்போது நடித்த ‘ஜெயிலர்’ படம் வரை தன் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/tamannaahspeaks/?utm_source=ig_embed&ig_rid=1e7a3fca-5c21-48bb-a96c-65058afb27ef

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இளமைக் கனவுகள் முதல் பருவ உணர்தல் வரை. துன்பத்தில் இருக்கும் ஒரு பெண், முதல் பக்கத்து வீட்டு பெண், மோசமான பவுன்சர், ஒரு பயமற்ற புலனாய்வாளர் வரை… என்ன ஒரு பயணம். இந்த 18 வருட அற்புதமான பயணத்தில் என்னுடைய உண்மையான முதல் காதல், நடிப்பு மட்டும்தான்’ என கூறியுள்ளார் தமன்னா.

தமன்னாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours