தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போது தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பை குறைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து,செப்டம்பர் 2-ம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில், கர்நாடகா மாநிலம் திரும்பிய அவர், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விட தமிழ்நாடு கூடுதல் நீரை பயன்படுத்தி விட்டதாக கூறினார்.மேலும், வறட்சி காலத்தில், கர்நாடகாவை போன்று தமிழ்நாடு விவசாயிகள் சாகுபடியை கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நிலவரத்தை, காவிரி மேலாண்மை ஆணையம் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
+ There are no comments
Add yours