வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. அடுத்த மாதத்தில் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours