பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பிற போட்டிகளிலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்துவதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளப் போவதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தங்கப் பதக்கம் வென்றதற்காகத் தான் பெரிதும் மகிழ்வதாகக் குறிப்பிட்டார். இனிவரும் மற்ற போட்டிகளிலும், பாரீசில் அடுத்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அதற்காகத் தயாராகப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஏராளமான வசதிகள் உள்ளதாகவும், அவற்றைக் கொண்டு தொடர்ந்து தன்னை மேம்படுத்தி வருவதாகவும் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours