தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட சரிபார்ப்புகளுக்கு பின் விஸ்வகர்மா திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி வரை 9,246 பயனாளிகள் விஸ்வகர்மா திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரூ.13,000 கோடியில் விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கடந்த சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றி அறிவித்தார். பாரம்பரிய தொழில் செய்வோருக்கு அவர்கள் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்பின் நாட்டில் பல்வேறு இடங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தொழில்களை மேம்படுத்தும் வகையில் கடன்கள் வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதனை செலுத்தியதன் பின்பு , அடுத்ததாக இரண்டாம் கட்டமாக 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும்.
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடன்களுக்கு 5 சதவீத வட்டி விதிக்கப்படும் என்றும், இதற்காக 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனிடையே, இந்த பரம்பரை தொழில் முறைக்கு மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், தந்தை தொழிலை தொடர மகன் உந்தப்படுகிறார்.
இதன் காரணமாக மகன் வேறு துறை செல்லும் நிலை மாறும் என எதிர்ப்பு குரல் எழும்பியது. இந்த நிலையில், தமிழகத்தில் கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours