நிலவில் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் முதல் முறையாக விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
இந்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்து சந்திரனின் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பிரக்யான் ரோவர் அங்கு கந்தக தாது படிந்து இருப்பதை உறுதி செய்துள்ளது.
ரோவர் கலனில் உள்ள லிப்ஸ் எனப்படுகின்ற லேசர் தூண்டுதலுடன் மண் துகள்களை உடைத்து ஆய்வு செய்கின்ற அலைமானி மூலம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலவின் தென் துருவத்திற்கு அருகே மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆய்வு இதுவே முதலாவதாகும்.
இது தவிர ஏற்கனவே எதிர்பார்த்தபடி நிலவின் தென் துருவத்திற்கு அருகே அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், மாங்கனீஸ், சிலிக்கான் ஆகியவற்றின் மூலக்கூறுகளும் ஆக்சிஜன் மூலக்கூறுகளின் தடயங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இதனிடையே ஆய்வு பணிகளை மேற்கொண்டபடி, விக்ரம் லேண்டரையும் பிரக்யான் ரோவர் தற்போது படம் பிடித்து அனுப்பியுள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி இன்றுடன் ஒரு வாரம் பூர்த்தியாகிறது.
இது மேலும் ஒரு வாரக்காலத்திற்கு தனதுஆய்வை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது.
+ There are no comments
Add yours