மத்தியக் கிழக்கு நாடுகளுடன் ஆழமான நட்புறவையும் சகோதரத்துவத்தையும் இந்தியா கொண்டுள்ளதாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்த ஜி 20 வணிகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மாநாடு நிறைவடைந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், உலக வணிக அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்க மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
ஜி 20 அமைப்பில் சவூதி அரேபியா ஏற்கெனவே உறுப்பினராக உள்ளதாகவும், ஓமன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்தியக் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த நான்கு நாடுகளும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதன்முறை என்றும் குறிப்பிட்டார். இந்த நாடுகளுடன் நெருங்கிப் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது இந்தியாவுக்கும், இவற்றுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுவதாகவும், ஆழமான நட்புறவையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours