உதயநிதி ஸ்டாலின் மகாராஷ்டிராவிற்குள் நுழைய முடியாது.! பாஜக அமைச்சர் பரபரப்பு பேட்டி !

Spread the love

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி தனது விமர்சனத்தை முன்வைத்தார். சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

சனாதன கொள்கை பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குகள் போட்டாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன். எனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி அண்மையில் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

சனாதன கொள்கை பற்றி திமுக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கூறுகையில், சமதர்ம சமன்பாடு என்பதே காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு. எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் அவர்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் உண்டு என விளக்கம் அளித்து இருந்தனர்.

தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில்,சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும் கருத்து தவறானது. அதனை அவர் வாபஸ் பெறாத வரையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைய முடியாது என அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours