விமானத்தில் சென்றபோது மூச்சற்றுப் போன குழந்தைக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார்.
பெங்களூரில் இருந்து தில்லிக்குச் சென்ற விஸ்தாரா விமானத்தில் பயணித்த 2 வயதுப் பெண் குழந்தை திடீரென மூச்சு விடுவதை நிறுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் பயணித்த தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், குழந்தையின் மூச்சுப் பாதையைச் சரிசெய்து, மருந்துகளைச் செலுத்திக் காப்பாற்றி உள்ளனர்.
இதையடுத்துக் குழந்தையின் ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மருத்துவ அவசர நிலை காரணமாக விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது. அங்கு மருத்துவரிடம், அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விமானத்தில் குழந்தைக்கு முதலுதவி அளித்துக் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours