ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், அதன் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ‘ஜி-20’ உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் இந்தியா வர உள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்திய வருவது உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிடுள்ள அறிவிப்பில், ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது, எனவே அவரது பயண திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. தொடா்ந்து 9, 10-ம் தேதிகளில் ‘ஜி-20’ உச்சிமாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்பாா்.
ஜோ பைடனின் இந்த பயணத்தில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்பட அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனைத்து வழிக்காட்டுதல்களும் முறையாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours