விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் சிக்கல்..? இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Spread the love

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராச்சி மையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது .

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் லேண்டரைத் தரையிறக்க விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நிலவின் தென்துருவப் பகுதியில் நாளை மாலை சந்திரயானின் விக்ரம் லண்டர் தரையிறங்க சாதகமான சூழல் இல்லையென்றால் நிலவில் சந்திரயான் தரையிறக்கம் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படும் என இஸ்ரோவின் விண்வெளி செயல்பாட்டு மையத்தின் விஞ்ஞானி நிலேஷ் எம்.தேசாய் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ 99 சதவீத பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திராயன் -3 நாளை மாலை குறித்த நேரப்படி நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் இந்திய விஞ்ஞான வளர்ச்சியில் மாபெரும் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours