இந்தியாவுடன் இறுதி போட்டியில் களமிறங்க போவது யார்.? இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை.!

Spread the love

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இறுதி போட்டிக்கு செல்லும் ‘சூப்பர் 4’ சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன.

ஏற்கனவே நடந்த சூப்பர் 4 சுற்றுகளில் இந்திய அணியானது பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 42 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக, நாளை இந்திய அணி வங்கதேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் எதிர்கொள்கிறது.

இன்று நடைபெறும் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும், தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணிக்கும் இன்றைய வெற்றி மிக முக்கியமானது. இன்று வெற்றி பெற்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் விளையாடாமல் இன்றைய போட்டியில் மழை விளையாடி போட்டி ரத்து செய்யப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி இறுதி போட்டிக்கு சென்றுவிடும். இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours