மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை துவக்கி வைத்த கனிமொழி!

Spread the love

நாகரிகமாக பேசுபவர்களுக்குத்தான் பதில் சொல்ல முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து தூத்துக்குடி எம்.பி., கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் எம்.இ.ஆர்.எப்., அறக்கட்டளை இணைந்து நடத்தும் காது மற்றும் பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். சிறப்பு மருத்துவ முகாமை மக்களவை திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் மாவட்டம் முழுவதும் இருந்து வருகை தந்து சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 26 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்டஇருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “சமையல் எரிவாயு விலையை குறைத்து இருக்க முடியும் என்றால் முன்பே குறைத்திருக்கலாம். தேர்தல் வரும் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலையை குறைப்பது பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டுமே கவலை. மற்றதை பற்றி கவலை இல்லை என்பது போல் உள்ளது” என்றார்.

மேலும், “வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், எவ்வளவோ விஷயங்களை செய்யலாம். சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது சமையல் அறையிலேயே பெண்கள் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் வருவதால் பிரதமர் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்” என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவையும், கனிமொழி குறித்தும் விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாகரீகமாக பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம் என்று மட்டும் பதிலளித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours