மன்னிப்பு கோரிய திமுக எம்.பி .!

Spread the love

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்களன்று தொடங்கி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக எம்பிக்கள் சென்னை வெள்ளம் மற்றும் தமிழக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடரில் தர்மபுரி மக்களவை தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் நேற்று பேசினார்.

அவர் பேசுகையில், ஹிந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் கோ மூத்ரா மாநிலங்கள் (மாட்டு மூத்திரம்) என கூறுவோம். அந்த மாநிலங்களில் பாஜக தான் வெற்றி பெற்று வருகிறது ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது மக்களவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக – பாஜக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நேர்ந்து அவை ஒத்திவைக்கும் நிலைக்கு சென்றது.

கோ மூத்ரா என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி கருத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி கூட திமுக எம்பி செந்தில்குமாரின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் வலுத்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை காங்கிரஸ் எம்.பி, கார்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அவர் பேசிய கருத்துகளை திரும்ப பெற வேண்டும்” என கூறி இருந்தார்.

மேலும் திமுக தரப்பில் கூட எம்பி செந்தில்குமார் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது . இதனை அடுத்து மக்களவையில் தனது பேச்சை திரும்ப பெறுவதாக திமுக எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த அவையின் உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நேற்று நான் பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். எனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்” என்று மக்களவையில் இன்று செந்தில்குமார் பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours