சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.. அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற போகிறது. வரும் 20ம்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இந்நிலையில சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படவில்லை. இந்த முறை கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்து.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த தேர்தல்களைப் போலவே கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சீமான் தனது மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதி மன்மோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும் பொது சின்னம் பட்டியலில் உள்ள அந்த சின்னத்தை முதலில் கோருபவருக்கே முன்னுரிமை அளித்து தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும், அதன்படி, அந்த சின்னம் தற்போது வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இதனிடையே சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தை டிசம்பர் 17 ஆம் தேதி அன்று கர்நாடகாவைத் சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி, கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டதால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியது. அந்த கட்சி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் தங்களுடன் கூட்டணி அமைத்தால் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தயார் என பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி கூறியது.
இது ஒருபுறம் எனில், டெல்லி உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், இந்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க தொடங்கிய நிலையில், வழக்கில் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது,. மேலும் இந்த வழக்கை வரும் 26 தேதிக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தெரிவித்திருந்தது..
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27ம் தேதி என்பதால் அது சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறியது. ஏனெனில் மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதாலும், வரும் 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளதை குறிப்பிட்டு வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
அவசர வழக்காக இன்று (நேற்று) அல்லது நாளைக்குள் (இன்று) வழக்கை விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் நேற்று கோரிக்கை கடிதியிருந்தார். இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை நாளை காலை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
+ There are no comments
Add yours