பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த திருச்சி சூர்யா சிவா மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அதாவது, பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours