நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்தது. கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழு தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் குழுவில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரி ஆனந்தன், மணிசங்கர் ஐயர் ஆகியோர் உள்ளனர். கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours