இயற்கை பேரிடர் குறித்து பொதுமக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வாயிலாக
எச்சரிக்கை செய்தி அனுப்பும் மாதிரி சோதனை நடத்தப்பட்டது.
நாடு தழுவிய அளவில், மத்திய அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து, நிலநடுக்கம், சுனாமி மற்றும் வெள்ளம் தொடர்பான எச்சரிக்கைகளை அனுப்ப அமைப்பை உருவாக்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆக.,17 முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும், பீப் ஒலியுடன், எமர்ஜென்சி அலெர்ட் பிளாஷ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பிளாஷ் செய்தியில், ‘இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் பிராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பான் இந்தியா டெஸ்ட், அவசர எச்சரிக்கை அமைப்புக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது’
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெவ்வேறு பிராந்தியங்களில், அவசர காலங்களில் எச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்படுவதைவும், மொபைல் ஆபரேட்டர்கள், செல் பிராட்காஸ்டிங் அமைப்பின் திறனை பரிசோதிக்க இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.இதேபோன்று, கடந்த ஜூலை 20ம் தேதி பலரது மொபைல் போனுக்கு மாதிரி சோதனை முறையில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours