பேன்சி’ பதிவு எண் ஏலம்.. 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நம்பர் ‘1’

Spread the love

புதுடில்லி: டில்லியில் வாகனங்களுக்கான, ‘பேன்சி’ பதிவு எண் பெறுவதற்கு நடத்தப்பட்ட ஏலத்தில், 0001 என்ற எண், 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண்களை பெறுவதற்கு போக்குவரத்து துறை, ‘ஆன்லைன்’ வாயிலாக ஏலம் நடத்துகிறது. குறைந்தபட்ச ஏலத்தொகை, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பதிவு எண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலும், மற்ற எண்களுக்கு வாரா வாரமும் ஏலம் நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் ஏல நடைமுறை, 2014 முதல் அமலில் உள்ளது.

டில்லி போக்குவரத்து துறை கடந்த ஜன., முதல் ஜூன் வரை நடத்திய ஏலத்தில், பெரும்பாலான வாகன ஓட்டிகள் விரும்பும் 0001 என்ற பதிவு எண்ணுக்கு மார்ச் மாதம் நடந்த ஏலத்தில், 5 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் இந்த எண், 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ரகசியம் கருதி அதை ஏலத்தில் எடுத்தவரின் விபரங்கள் வெளியிடப் படவில்லை.

இதற்கு அடுத்தபடியாக, 0009 என்ற பதிவு எண், கடந்த ஜூன் மாதத்தில் 11 லட்சம் ரூபாய்க்கும், 0007 என்ற எண் ஜன., மாதத்தில் 10.8 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. இது போன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக இதுபோன்ற ஏலத்தில், 0002 முதல் 0009 வரையிலான எண்களுக்கு ஆரம்ப விலை 3 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக, 0010 முதல் 0099 வரையிலான எண்களுக்கு 2 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்படுகிறது. 0100, 1111, 0300, 0333 உள்ளிட்ட எண்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் புனிதமாக கருதும் 0786 உட்பட, தாங்கள் விரும்பும் வரிசையில் எண்களை பெற 25,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours