நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் தற்போது நிலவை நெருங்கியுள்ளது.
சந்திரன் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர்(Lander) இன்று தனியாக பிரிக்கப்பட்டு சந்திரனை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரே கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரன் 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட வெற்றிப்பயணங்களுக்கு பிறகு சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுவட்ட பாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர்(Lander) விண்கலம் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.
இருப்பினும் விண்கலத்தின் மற்றொரு பகுதி ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதன்பிறகு இந்த வெற்றி தொடரும் என இந்திய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு 615 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து விண்ணில் செலுத்தியது.
LVM-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள 2ம் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சரியாக மதியம் 1.15 மணிக்கு உந்து சக்தி கலனில் இருந்து பிரிந்தது விக்ரம் லேண்டர். இந்த லேண்டரின் சுற்றுவட்ட பாதை நாளை குறைக்கப்படும். சுற்றுப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லுமாறு லேண்டரின் பயணம் மாற்றப்பட உள்ளது. தொடர்ந்து லேண்டர் வரும் ஆக.23 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவை நோக்கிய இந்தியாவின் சந்திரயான் 3 பயணம் திட்டமிட்டபடி நடைபெற்று வரும் நிலையில், விஞ்ஞானிகளும் நாட்டு மக்களும் மிகுந்த பெருமை கலந்த மகிழ்வோடு லேண்டரின் நகர்வை உற்று நோக்கி வருகின்றனர்.
+ There are no comments
Add yours