உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியானது.இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை பயணம் மேற்கொண்டார்.
மேலும் பத்ரிநாத் ,ஹரிதுவார், ரிஷிகேஷ்,துவராக உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற அவர்,பின்னர் உத்திரபிரசேதம் திரும்பினார்.அங்கு உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநரை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி காந்தின்(rajinikanth) ஆன்மிக பயணத்தின் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை அவரது ரஜினிகாந்த் மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து அயோத்தியில் உள்ள பிரசித்தி பெற்ற ஹனுமகிரி கோவிலுக்கும் தம்பதியினர் சென்றனர்.கோயில் தரிசனத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இது நீண்ட நாள் கனவு” என்றார்.
ராம ஜென்மபூமி வழித்தடம் மற்றும் ராமர் கோவில் கட்டும் பணியை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, இது சரித்திரம் என்று பதிலளித்த ரஜினி, “திறந்த பிறகு, வேறு எப்படி மாற்றப்படும் என்று பாருங்கள்” என்றார்.
ராமர் கோவில் கட்டுவது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது என்று பதிலளித்தார்.
+ There are no comments
Add yours