ஜி20 மாநாட்டுக்கு வந்த சீன தூதர்கள் கொண்டு வந்த மர்ம பை… அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள்

Spread the love

கடந்த வியாழக்கிழமை, 5 நட்சத்திர விடுதிக்கு வந்த சீன அதிகாரிகளில் ஒருவர் வித்தியாசமான வடிவில் பை ஒன்றை கொண்டு வந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18வது மாநாடு கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இதில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சீன குழுவினர் கொண்டு வந்த சந்தேகத்திற்குரிய பை தொடர்பாக மர்மம் நீடித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை, 5 நட்சத்திர விடுதிக்கு வந்த சீன அதிகாரிகளில் ஒருவர் வித்தியாசமான வடிவில் பை ஒன்றை கொண்டு வந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

இருப்பினும், தாஜ் பேலஸ் ஹோட்டலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், தூதரக நெறிமுறைகளைப் பின்பற்றி பைகளை கொண்டு வர அனுமதித்தனர்.

பின்னர், சீன தூதர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில், ஹோட்டல் ஊழியர் ஒருவர் இரண்டு பைகளுக்குள் சந்தேகத்திற்குரிய உபகரணங்கள் இருப்பதை கண்டார்.

இது தொடர்பாக, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சீன தூதர்களிடம் பைகளை சோதனை செய்ய வேண்டும் என அதிகாரிகள் குழு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சீனத் தரப்பு அதை தூதரகம் தொடர்பானவை எனக் கூறி, எடுத்து செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

சோதனை செய்ய ஒப்பு கொள்ளாததால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சீன தூதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில், குறிப்பிட்ட அந்த பையை தூதரகத்திற்கு அனுப்ப சீன அதிகாரிகள் ஒப்பு கொண்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours