கடந்த ஜூலை மாதம், ஒரு வைரலான வீடியோ தக்காளி வியாபாரி ராமேஸ்வரின் அவல நிலையையும், தக்காளியின் விலை உயர்ந்து வருவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற இந்த வீடியோவில் தோன்றும் காய்கறி வியாபாரியான ராமேஷ்வரைச் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து, ஆகஸ்ட் 14 திங்கள் அன்று டெல்லி இல்லத்தில் அவருக்கு மதிய உணவு விருந்தளித்து ஆதரவு வார்த்தைகளை பேசினார்.
ராமேஷ்வருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் ராகுல் வெளியிட்டார். ராமேஸ்வரை ஒரு “கலகலப்பான நபர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் தனது மற்ற சமூக ஊடக பக்கங்களிலும் ராமேஸ்வருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார், மேலும் “ராமேஷ்வர் ஜி ஒரு கலகலப்பான நபர்! கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்பான குணத்தின் ஒரு காட்சியை அவரிடம் காணலாம். பாதகமான சூழ்நிலைகளிலும் புன்னகையுடன் முன்னேறுபவர்கள் உண்மையிலேயே ‘பாரத பாக்ய விதாதா’ என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உரையாடலின் படம் X இல் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அதில் “மக்கள் நாயகத்தை சந்திக்க ராமேஷ்வர் விருப்பம் தெரிவித்திருந்தார். இதனால் அவர்கள் இருவரும் சந்தித்தனர்” என்று எழுதப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் டெல்லியில் உள்ள வீட்டில் ராகுல் காந்தி மற்றும் ராமேஷ்வர் மதிய உணவை ருசிக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஜூலை மாதம், ஒரு வைரலான வீடியோ ராமேஸ்வரின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
அது தக்காளியின் விலை உயர்ந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த காணொளி, டெல்லியின் ஆசாத்பூர் சந்தையில் ராமேஸ்வர், தக்காளியின் விலை அதிகரித்து வருவதால், வெறுமையான கை வண்டியுடன் போராடிக்கொண்டிருப்பதை சித்தரித்து இருந்தது.
காங்கிரஸ் தலைவர்களால் பரவலாக பகிரப்பட்ட இந்த வீடியோ, அதிகரித்து வரும் விலைவாசியையும், அரசாங்கம் கையாளும் விதத்தையும் விமர்சிக்கும் வகையில் அமைந்தது. பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்காக ராகுல் காந்தி ஆசாத்பூர் மண்டிக்கு விஜயம் செய்தார்.
பின்னர் வெளியான வீடியோவில், ராகுல் காந்தியை சந்திக்க ராமேஷ்வர் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours