இன்றைய (செப்.6) ஒரு வரி ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மேஷம்: எதிர்பார்த்து கொண்டிருந்த பணம் வரும். பழுதான பொருட்களை மாற்றுவீர்.
ரிஷபம்: குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவர்.
கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்.
கன்னி: வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள்.
துலாம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக் கூடும்.
விருச்சிகம்: சகோதரர்களின் ஆதரவுடன் பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவீர்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
மகரம்: எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி பிறக்கும்
கும்பம்: மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
மீனம்: பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உண்டு.
(குறிப்பு: ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே)
+ There are no comments
Add yours